குடும்பத்திலிருந்து விலகிச் செல்வது, நேசிப்பவரின் மரணம், நோய், உடைந்த உறவு… இப்படி தனிமை பல வடிவங்களை எடுக்கும்.
இது நம்மை நிராகரித்து, தனிமைப்படுத்தி,பயத்தை ஏற்படுத்தும்.
சங்கீதக்காரன் தனிமையை உணர்ந்தபோது, அவனுடைய வேதனையை எங்கு எடுத்து செல்ல வேண்டும் என்று அவனுக்குத் தெரிந்தது:"என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன். என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்." சங்கீதம் 25:16-17
நாம் தனிமையாக உணரும்போது, நம்முடைய கவலைகளையும் இறைவனிடம் எடுத்துச் சென்று அவருடைய வார்த்தையில் ஆறுதல் காண வேண்டும்:
நிராகரிப்பா?
"என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்." சங்கீதம் 27:10
தனிமையா?
"மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்." ரோமர் 8:38-39
பயப்படுகிறீர்களா?
"அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்." I பேதுரு 5:7
மனமுடைவா?
"இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்." சங்கீதம் 147:3
Post a Comment