சில நேரங்களில் நாம் பழைய குழந்தை பருவ “தொலைபேசி” என்ற விளையாட்டு போன்று ஜெபத்தைப் பார்க்கிறோம்.
தொடக்கப்பள்ளியில் அந்த விளையாட்டை விளையாடியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? எல்லோரும் ஒரு வட்டத்தில் அமர்ந்து ஒரு சிறப்பு “ரகசியம்” ஒரு குழந்தையின் காதில் கிசுகிசுக்கப்படும்.
எல்லோரும் செய்தியைக் கேட்கும் வரை, அந்த ரகசியம் வட்டத்தைச் சுற்றி, ஒரு நேரத்தில்ஒருவர் காதில் கிசுகிசுக்கப்படும். செய்தி வட்டத்தைச் சுற்றியுள்ள நேரத்தில், வழக்கமாக ரகசியம் மிகவும் சிதைந்துவிடும், அது விளையாட்டைத் தொடங்கிய நபராலே புரிந்துகொள்ளமுடியாது.
நாம் சரியாக சிந்தித்து பார்த்தால், சில சமயங்களில்நம் பிரார்த்தனைகள் தொலைபேசி விளையாட்டுக்கு ஒத்ததாக இருப்பதைப் போலஉணரமுடியும்.
நாம் கடவுளை ஜெபத்தில் அழைக்கிறோம், ஆனால் சில சமயங்களில் கடவுள் நம் செய்தியை சரியாகக் கேட்டிருக்கக்கூடுமோ என்று நினைக்கிறோம்.
கடவுள் நம்மைக் கேட்டாரா என்று கேள்வி எழுப்புகிறோம், ஏனென்றால் நம்முடைய ஜெபங்களின் விளைவு நாம் எதிரிபார்த்தது போன்று இருந்ததில்லை.
நமக்கு நாமே ஆச்சரியப்படுகிறோம்,
கடவுள் என் ஜெபத்தை சரியாகக் கேட்டாரா?
அவர் ஏன் பதிலளிக்கவில்லை?
அவர் உண்மையில் அக்கறைப்படுகிறாரா?
நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள் அல்லது நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளின் நிலைக்கு மாறாக, கடவுள் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார்.
ஒரு வார்த்தை அல்லது கண்ணீர் கூட உங்கள் கடவுளால் கவனிக்கப்படாமல் போகாது.
அவருக்கு தெரியும். அவர் கேட்கிறார் - அவர் பதிலளிக்கிறார்.
இன்று, மலைகளை நகர்த்தும் பிரார்த்தனை வாழ்க்கையை வளர்ப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பார்ப்போம்.
ஜெபத்தில் எப்படி மலைகளை நகர்த்துவது
மக்கள் ஜெபிப்பதைப் பற்றிய முதல் விவரத்தை ஆதியாகமம் 4:26-ல் காணலாம்.
"அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்."
இந்த அத்தியாயத்தின் சூழலில், பாவத்தின் முதல் செயல் செய்யப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
3 ஆம் அத்தியாயத்தில் ஆதாம் மற்றும் ஏவாளின் கீழ்ப்படியாமையால் உலகம் ஏற்கனவே பாவத்தால் நிறைவுற்றது, இப்போது அவர்கள் குழந்தைகளில் அவர்கள் தேர்ந்தெடுத்ததன் எதிரொலிக்கும் விளைவுகளைக் காண்கிறோம்.
காயீன், தன் சகோதரன் ஆபேலின் மேல் கோபத்திலும் பொறாமையிலும் அவனைத் தாக்கி கொன்றான். (ஆதி 4:8)
காயீனுக்கு ஆறு தலைமுறைகளுக்குப் பிறகு, அக்கால மக்கள் பாவம், கொலை மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் தங்களைத் தாங்களே கண்டனர்.
பின்னர் பல வசனங்களுக்கு பிறகு, மக்கள் ஜெபத்தில் கர்த்தருடைய நாமத்தை அழைக்க ஆரம்பித்தார்கள்.
நம்மை பற்றி பார்க்கலாம்?
நாமும் பாவமான, அவநம்பிக்கையான காலங்களில் வாழ்கிறோம்.
செய்திகளை பார்த்தால் நாம் ஒரு கொலைகார, பெருகிய முறையில் பொல்லாத உலகில் வாழ்கிறோம் என்பதை தெளிவாகக் காணலாம்.
கேள்வி என்னவென்றால், ஆதியாகமம் 4:26-ல் மக்கள் செய்ததைப் போல ஜெபத்தில் மலைகளை நகர்த்தும்படி கர்த்தருடைய நாமத்தை நாம் அழைக்கிறோமா என்பது தான்.
மலைகளை நகர்த்தும் ஜெபம்
ஹீப்ரு மொழியில் அழைப்பு என்ற சொல் உங்கள்தொலைபேசியில் யாரையாவது அழைப்பதாக அர்த்தமல்ல.
அதன் அர்த்தம் ஒருவரை பெயரால் அழைப்பது அல்லது…
- அழைக்க, பாராயணம் செய்ய, படிக்க, அழ, அறிவிக்க, வரவழைக்க, அழைக்க, ஆணையிட மற்றும் நியமிக்க
- நம்மை நெருக்கமாக அறிந்த ஒரு கடவுளை அழைப்பது.
- நம் வாழ்க்கை முறிவின் மத்தியில் நம் அப்பா தந்தையிடம் கூக்குரலிடுவது.
- பரிசுத்த ஆவியானவரை நம் மத்தியில் செல்லஅழைப்பது.
- பிரபஞ்சத்தின் படைப்பாளருடன் ஒரு தெய்வீக நியமனம் செய்வது.
- அவருடைய உயிர்தரும் வார்த்தையில் அவருடைய வாக்குறுதிகளை பிரகடனம் செய்வது.
Post a Comment